ஓமத்தை இப்படி செய்து குடிங்க! சளி பிடிக்காது! சளி இருந்தாலும் கரைத்து வெளியேற்றி விடும்!

0
114

ஓமம் நம் அனைவரின் வீட்டு சமையலறையிலும் இருக்கும். நம் வீட்டில் சமையலறையில் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களும் நமது உடலுக்கு தேவையான மருந்தாக பயன்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக அதனை பின்பற்றி வருகிறார்கள்.

இப்பொழுது ஓமம் எதற்கு பயன்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

1. வயிறு வலி போக 5 கிராம் ஓமத்தை எடுத்து சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து வைத்துக் கொண்டு அந்தப் பொடியுடன் சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வரும் பொழுது வயிற்று வலி குணமடையும்.

2. செரிமான பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் குடிக்கும் தண்ணீரில் ஓமத்தைப் போட்டு குடித்து வரும் பொழுது இந்த பிரச்சனைகள் குணமாகும்.

3. எப்பொழுதும் வயிறு மந்தமாக இருக்கு என்று சொல்பவர்களுக்கு சீரகம் மற்றும் ஓமம் சம அளவில் எடுத்துக் கொண்டு கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். சாப்பிட்டபின் 20 நிமிடம் கழித்து இந்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது வயிற்று மந்தம் குணமாகும்.

4. நெஞ்சு சளி குணமாக ஊரில் ஓமப்பொடி உப்பு கலந்து குடித்து வரும் பொழுது நெஞ்சு சளியை வெளியேற்றி விடும்.

5. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். அவற்றின் கால் மூட்டுகளில் தடவி வரும்பொழுது வலி படிப்படியாக குறையும். அதேபோல பல் வலி உள்ளவர்களும் இந்த ஓம எண்ணெயை பஞ்சில் நனைத்து பல்லின் மீது வைத்தால் பல்வலி குணமாகும்.

6.ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது புகைச்சல் இருமல் வரும் அதாவது வறட்டு இருமல் போல இருக்கும் இரவெல்லாம் இருமிக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் ஆகியவற்றை எடுத்து வைத்து பொடியாக்கி கொண்டு சரிபாதி அளவு பனை கற்கண்டு சேர்த்து காலையிலும் ,மாலையிலும் உண்டு வந்தால் வறட்டு இருமல் என்கின்ற புகைச்சல் இருமல் நீங்கும்.

இது போன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஓமம் தீர்வாக அமைகிறது.

author avatar
Kowsalya