Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி! 

#image_title

திறந்தவெளியில் கெமிக்கல்களை கொட்டிய தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி! 

தனியார் நிறுவனம் ஒன்று  திறந்த வெளியில் கெமிக்கல்களை கொட்டுவதால்  அதில் உள்ள துத்தநாக துகள்கள் காற்றில் பரவி பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில்  தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அந்த பகுதியில்  அபாயகரமான துத்தநாக பித்தளை கழிவுகளை பொதுவான இடங்களில் கொட்டி வருவதாக  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. துத்தநாக துகள்கள் காற்றில்  கலந்து பரவுவதால் அந்த பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

எனவே இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதை அடுத்து கெமிக்கல்களை திறந்தவெளியில் கொட்டி வரும் அந்த தனியார் நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி அந்த தனியார் நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரிய விளக்கம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  அறிக்கை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version