எவராலும் அதிமுகவை அழிக்க முடியாது! நானே முன்னின்று காப்பேன் எடப்பாடிபழனிசாமி சபதம்!

0
140

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்ற சூழ்நிலை நிலவி வந்தது. அவர் மறைவிற்குப் பிறகு அந்த கட்சியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தனர்.

ஆனால் அவை அனைத்தையும் தன்னுடைய சாதுரியத்தால் சரி செய்து கட்சியை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

தர்மயுத்தம் செய்து கட்சியை இரண்டாக பிரிக்க நினைத்தவர் ஓபிஎஸ். அப்படி இறந்த நிலையில், அவருடன் சமாதானப் போக்குடன் சென்று அவரையும் மீண்டும் ஒன்றிணைத்து மறுபடியும் அதிமுகவை பலமான கட்சியாக கட்டமைத்ததில் எடப்பாடி பழனிச்சாமியின் பங்கு அளப்பரியது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்று நினைத்திருந்த நிலையில், அந்த கட்சி தோல்வியை சந்தித்தது.அதே நேரம் பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அடி எடுத்து வைத்தது.

அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது ஆனால் தற்போது அந்த கட்சி ஒற்றை தலைமை என்ற நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிமுக தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், என்று இரு தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

அதாவது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அவர்கள் இருந்து வருகிறார்கள் அவரோடு இணைய ஒருங்கிணைப்பாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.

தற்போது அந்த கட்சி கட்டுக்கோப்பாக தான் இருக்கிறது. ஆனாலும் கூட ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக அந்தக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

இந்த ஒற்றை தலைமை என்ற கோரிக்கை யார் பக்கம் இருந்து எழுந்திருந்தாலும் அதனை உடனடியாக கைவிட்டு கட்சியை பலப்படுத்தும் வேலையில் இறங்க வேண்டும் என்பதே அதிமுகவினர் அபிமானிகளின் கருத்தாக இருந்து வருகிறது.

மீண்டும் ஒற்றை தலைமை என்ற நிலையை நோக்கி அதிமுக செல்லுமானால் அந்த ஒற்றை தலைமை என்ற இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வந்து விட்டால் எந்தவித பிரச்சனையுமிருக்காது.

ஆளும்கட்சிக்கு இது மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும். ஆனால் அந்த ஒற்றை தலைமை எந்த இடத்திற்கு ஓபிஎஸ் வென்று எதிர்காலத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த கட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்வது மிகக் கடினம் என்று தான் சொல்ல வேண்டும்.

வெகு காலமாக கட்சியில் இருந்தாலும் கூட ஓபிஎஸ் அவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ள சாதுரியம் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

அதோடு ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விவேகமும் அவரிடம்தான் இருக்கிறது. ஒருவேளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து ஓபிஎஸ் அவர்களை நோக்கி செல்லுமானால் நிச்சயமாக அவர் திமுகவிற்கு எதிராக பலமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

தற்போது அதிமுகவில் நடைபெறும் குழப்பங்கள் அனைத்தையும் உற்றுநோக்கி யோசித்தால் ஒருவேளை மறைமுகமாக அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஆளும் கட்சிதான் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.

பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் காரணமாக, கலக்கமடைந்திருக்கும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருடைய இல்லத்தில் நாள்தோறும் குவிந்து வருகிறார்கள்.

இந்த ஒற்றை தலைமை என்ற விவகாரத்தில் சட்டரீதியான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினரை சார்ந்தவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடத்த வேண்டும் என 2300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுக்குழுவை நடத்தவும், அதில் தவறாமல் பங்கேற்றுக்கொள்வோம் என்று உறுதியளித்து எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு மாவட்ட செயலாளர்கள் மூலமாக கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு நடுவே ஒற்றை தலைமை தொடர்பாக தனி தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில, அதிமுகவைப் பலவீனப்படுத்த ஒரு சிலர் முயற்சி செய்து வருவதாகவும், சூழ்ச்சியை முறியடிப்போம் என்றும், எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அதிமுக தகவல்தொழில்நுட்ப அணியைச் சார்ந்தவர்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி பலம் வாய்ந்த கட்சி அதிமுக விழுந்ததாக சரித்திரம் கிடையாது.

கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதனை நாங்கள் முறியடிப்போம் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது நானே முன்னின்று காத்து நிற்பேன் என உறுதியளித்திருக்கிறார்.