தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!

0
126

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!

தங்கத்தின் விலை விட தற்போதைய தக்காளியின் விலை கண்டு தான் மக்கள் பெருமளவு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இருந்தே தக்காளியின் விலை அல்லது கிலோ ரூ.130 ஆகவே இருந்து வருகிறது.

சாமானிய மக்கள் தக்காளி வாங்கி சமைப்பதையே விட்டு விட்டனர். இந்த காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் கடுமையான விளைவு உயர்வை கண்டு மக்கள் பெரும்பாலானோர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசோ அனைத்து நியாய விலை கடைகளிலும் ரேஷன் கார்டு இன்றி பொதுமக்கள் தக்காளியை வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து விரிவான தகவலையும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார். மேற்கொண்டு தக்காளியானது ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்சத்தில் ஒரு நபருக்கு ஒரு கிலோ தான் என்ற புதிய நிபந்தனையையும் விதித்துள்ளது.

ஆனால் பொதுமக்கள் இது பெரிய குடும்பங்களுக்கு போதாது எனவும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரண்டு கிலோவானது வழங்கினால் சற்று சமாளிக்க முடியும் என்ற அடுத்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

தமிழக அரசு மக்களின் இந்த கோரிக்கையை பரிந்துரை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.