புதுச்சேரியை தூய்மையானதாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் – முதல்வர் ரங்கசாமி

0
241

புதுச்சேரியை தூய்மையானதாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியை தூய்மையானதாகவும்,அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார் மேலும் புற்றுநோய் பரிசோதனையை ஆரம்ப காலகட்டத்தில் செய்துகொண்டு புற்றுனோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அறிகுறி மற்றும் ஆரம்பத்தில் கண்டறியும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக புதுச்சேரி- உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் துப்புர பணியாளர்களுக்கு புற்றுநோயின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துவும் விதமாக சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு துப்புர பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

மேலும் இந்த விழாவினில் புற்றுநோய் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மக்களுக்கு எளிதில் புரிவது போல கையேடு ஒன்றை சுகாதார துறை வெளியிட்டது.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ரங்கசாமி புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் அதிலிருந்து குணமடையலாம் எனவே அனைவரும் ஆரம்ப காலகட்டத்திலேயே பரிசோதனை செய்து புற்றுநோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். அது மட்டுமின்றி ஜி-20 மாநாட்டின் போது புதுச்சேரி முழுவதும் தூய்மையான அழகான புதுச்சேரி ஆக இருந்ததற்கு துப்புரவு பணியாளர்கள் காரணம்.

கடந்த நான்கு நாட்களாக தூய்மையாக இருந்த புதுச்சேரியை வருடம் முழுவதும் தூய்மையானதாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும் ஒப்பந்ததாரர்களுக்கு அரசு போதிய பணம் காலதாமதம் இன்றி வழங்கி வருகிறது. ஒப்பந்ததாரர்கள் குறைந்த லாபம் பார்க்கலாம் அதிக லாபத்திற்காக குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவது சரியானது அல்ல துறை அதிகாரிகள் அவர்களை வேலை வாங்க வேண்டும்.

அதேபோல் துப்புரவு பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்கினால் மட்டுமே அவர்களாலும் பணி செய்ய முடியும் எனவே துறை அதிகாரிகள் இதில் கவனத்தில் கொண்டு புதுச்சேரியை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் சுகாதார பணியாளர்களும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு குப்பைகளை அகற்றும்போது வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்தி ஏற்ற வேண்டும் மக்களின் அத்தியாவசியம் என்பதற்காக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி இடையூறு செய்யக்கூடாது என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.

Previous articleசின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு
Next articleகனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here