வெடித்து சிதறிய சிலிண்டர் – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சோகம்..!

0
204

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை பாலரங்காபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார் சரவணன். இந்த நிலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வெளியே வந்த பார்த்தனர். அப்பொழுது சவரணன் இருந்த மாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்தது.

சுவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்து சிதறிய போது மாடியில் இருந்த சுவர்கள் இடிந்து விழுந்ததில் கீழே நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நொருங்கின. இதுமட்டுமின்றி அவ்வழியாக சென்ற மின்கம்பிகளும் பாதிக்கப்பட்டு அப்பகுதி முழுவதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தகவறிந்து அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த சரவணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலையில் விபத்து நிகழ்ந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டில் சமையல் வேலைகளை முடித்தப்பின்னர் கேஸ் அடுப்பை முறையாக அணைக்க வேண்டும் என்றும், சிலிண்டரை ஆஃப் செய்ய வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினர்.

Previous articleதிமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுக முக்கிய பிரமுகரின் மகன்!
Next articleகுக்வித் கோமாளியின் வைல்ட் கார்ட் வின்னர் யார் தெரியுமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here