மின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி… கள்ளக்குறிச்சியில் சோகம்!

0
191

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஊ.செல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் 60ற்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ராமச்சந்திரன் ஆட்டுக் கொட்டகையில் தனது ஆடுகளைக் கட்டி வைத்து விட்டு உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கிராமத்தில் விடிய விடிய பெய்த கன மழையின் போது மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆடுகளை நம்பி தனது வாழ்வாதாரம் இருந்து வந்த நிலையில் மின்னல் தாக்கி 65 ஆடுகள் இறந்தது ராமச்சந்திரன் குடும்பத்தினரிடமும் அப்பகுதி மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபிக் பாஸ்4 ஷோவில் பெண்களே அதிகம்! குதூகலத்தில் ரசிகர்கள்!
Next articleதுணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஓ பன்னீர்செல்வம்! திடுக்கிடும் அரசியல் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here