உங்க வீட்டில் கெட்ட சக்திகள் இருக்குதா? அதனை உடனே விரட்டும் கருங்காலி திரிசூலம்.!!

0
563

 

 

உங்க வீட்டில் கெட்ட சக்திகள் இருக்குதா? அதனை உடனே விரட்டும் கருங்காலி திரிசூலம்.!!

செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருக்கக்கூடியவர் முருகப்பெருமான். முருகனின் அருளை பெற கருங்காலியை பயன்படுத்தலாம். அதிலும் கருங்காலியினால் செய்த வேலினை வழிபட்டு வந்தால் இன்னும் விசேஷமானது. கருங்காலி வேலை பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும்.

கருங்காலியால் செய்யப்பட்ட திரிசூலத்தை அம்மனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வது சிறப்பை தரும். திரிசூல வழிபாடு பாதுகாப்பையும், செல்வத்தையும் தருகிறது.
கருங்காலி வேல் மற்றும் திரிசூலத்தின் பயன்கள் பின்வருமாறு!
பகைவர்களை எல்லாம் வெல்லக்கூடியது.வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.செவ்வாய் தோஷத்தை நீக்கும்.துஷ்ட சக்திகள் அனைத்தும்நெருங்காது.மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.பித்தளை அல்லது செம்பால் ஆன தட்டை எடுத்து கொள்ளுங்கள். இந்த தட்டு இல்லையெனில் வெள்ளை அல்லது மஞ்சள் துணியை பயன்படுத்தி கொள்ளுங்கள், பின் தட்டில் பச்சரிசியை நிரப்பி கொள்ளுங்கள். பச்சரிசியை நிரப்பிய பின் அதன் நடுவில் கருங்காலி வேலை பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள்.கருங்காலி வேலிற்கு சந்தனம் குங்கும் இட்டு முருகனுக்குரிய பூக்களை தூவி, தீபம் காட்டி வழிபட வேண்டும். வழிபடும்போது முருகனுக்குரிய கந்தசஷ்டி கவசம் சொல்வது சிறப்பை தரும்.

திரிசூலத்தை வீட்டில் நல்ல சுபநாளில் பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள். பின் திரிசூலத்தை சுத்தமான நீரை கொண்டு அபிஷேகமும், ஆராதனையும் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்தபின் திரிசூலத்தை நன்றாக துடைத்து பின் சந்தனம் குங்கும் இட்டு கொள்ளுங்கள். திரிசூலத்தின் மேல் எலுமிச்சை பழத்தை குத்தி பூக்களால் திரிசூலத்தை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். பூஜையை முடித்த பின் சூலத்திற்கு தீப ஆராதனை செய்ய வேண்டும்.

 

Previous articleசோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்!
Next articleவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here