நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

0
245

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாரா நடித்த படம் என்றாலே அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும் என்பதும், நயன்தாரா அந்த அளவுக்கு தான் ஒப்புக்கொண்டு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை மிலிந்த் ராவ் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் அறிவிக்கப்பட்ட பின்னர் எந்த விதமான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்குவதாக இருந்த திரைப்படம் எதிர்பாராத காரணத்தினால் டிராப் ஆகி விட்டதால் நெற்றிக்கண் படத்தையும் விக்னேஷ் சிவன் டிராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் வேறு தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘நெற்றிக்கண்’ படத்திற்கு கொடுத்த தேதிகளையும் அவர் இந்த படத்திற்கே கொடுத்துவிட்டதால் இந்த படம் திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே முடிக்கப்படும் என தெரிகிறது.

Previous article“குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை ??? ” – பா.ஜ.க வின் சந்திர குமார் போஸ் அதிரடி !!!
Next articleவிழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here