மாவீரன் இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்… பின்னணி என்ன?

0
249

மாவீரன் இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்… பின்னணி என்ன?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படம் தொடங்கி சில மாதங்களுக்குள்ளாகவே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இப்படி வேகமாக படப்பிடிப்பை நடத்திவரும் இயக்குனரை இன்னும் வேகமாக ஷுட் செய்து தன் காட்சிகளை முடிக்குமாறு சிவகார்த்திகேயன் அழுத்தம் கொடுத்து வருகிறாராம். அதற்குக் காரணம் அடுத்து சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கதானாம்.

அந்த படத்தில் காஷ்மீர் பின்னணியில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம். காஷ்மீரில் பனிப்பொழிவு நடக்கும் போது அங்கு பல காட்சிகளை எடுக்க வேண்டி உள்ளதாம். அதனால் டிசம்பர் மாதத்தில் அங்கு படத்தின் ஷுட்டிங்கை திட்டமிட்டு உள்ளார்களாம். அதனால் அந்த படத்துக்கு செல்ல வேண்டுமென்றுதான் மாவீரன் ஷூட்டிங்கை முடிக்க சொல்லி நச்சரிக்கிறாராம்.

Previous article“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்!
Next article“படம் ஃப்ளாப் ஆனதால் 80 சதவீத சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன்” இப்படி ஒரு நடிகரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here