செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்!

0
316

செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா! வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறுபடுவதினால் நம் உடலில் அதிகளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் முக்கிய ஒன்றாக இருப்பது வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

பொதுவாக செரிமான பிரச்சனைக்கு மருந்தாக இருப்பது வெற்றிலை. வெற்றிலையை எவ்வாறு சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை நீங்கும் என நாமும் தெரிந்து கொள்ளலாம்.

நம் வயிற்றில் ஏற்படக்கூடிய கழிவுகளை நன்கு செரிக்க வைத்து மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. அதற்கு முதலில் ஒரு வெற்றிலையை எடுத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையின் காம்பு பகுதியை நீங்கி விட்டு தான் நாம் பயன்படுத்த வேண்டும்.

ஆஸ்துமா, சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. அதன் பிறகு இஞ்சி தோல் நீக்கி விட்டு ஒரு துண்டு எடுத்துக்கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிற்று வலி ,போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

அதனை அடுத்து ஒரு கிராம்பு. ஜீரண கோளாறு சரி செய்ய உதவுகிறது. அரை டீஸ்பூன் சீரகம். சீரகம் நம்முடைய உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டி நாம் உண்ணும் உணவை செரிக்க உதவுகிறது. ஐந்து துளசி இலைகள். துளசி இலை பொதுவாக வாயு கோளாறு போன்ற பிரச்சனைகளை குணமாக பயன்படுகிறது.

ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து வெற்றிலையை மடித்து நாம் மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் வாயு தொல்லை, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்றவைகள் நீங்கும்.

Previous articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு எதிரிகள் உதிரியாகும் நாள்!
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here