12- ஆம் வகுப்பு மறுதேர்வுக்கு நுழைவுச்சீட்டு நாளை வெளியீடு

0
203

பன்னிரண்டாம் வகுப்பு மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு நாளை(திங்கட்கிழமை) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 27 மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாணவர்கள் நாளை முதல் ஜூலை 17 வரை நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இணைய வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே நேரடியாகச் சென்று நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மறு தேர்வானது மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகலாம் என தேர்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleபாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleகோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்; பீதியில் அப்பகுதி மக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here