வீட்டில் ஒற்றை விளக்கு ஏற்றுவது நன்மை பயப்பதா?

0
232

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் தெய்வ வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பும் நாம் அனைவரும் விளக்கேற்றுவோம்.தீப ஒளி தெய்வத்தின் மற்றொரு ஒளியாகும்.தினம்தோறும் தீபமேற்றினால் நம் வாழ்வில் உள்ள துன்பம் என்னும் இருள் நீங்கி மகிழ்ச்சி என்னும் ஒளி பெறும்.இதனாலேயே தினம்தோறும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையில் சூரிய மறைவுக்குப் பின்பும் நம் முன்னோர்கள் விளக்கேற்ற அறிவுறுத்துவார்கள்.ஆனால் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன திரியால் விளக்கேற்ற வேண்டும்,எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்றவேண்டும் போன்றவற்றில் நமக்கு சந்தேகங்கள் இருக்கச் செய்யும்.இதன் ஒவ்வொன்றின் விளக்கத்தையும் நாம் அடுத்த அடுத்த பதிவில் காணலாம். இன்று நாம் எத்தனை விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?அதன் பயன்கள்?

ஒற்றை விளக்கு அதாவது ஒரு விளக்கு ஏற்றி வைத்து நம் தெய்வத்தை வழிபட்டு வந்தால்நினைத்த செயல் அனைத்தும் கைகூடும்.

இரண்டு விளக்கு ஏற்றி வைத்து நாம் இறை வழிபாடு செய்து வந்தோம் ஆனால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

மூன்று முகம் அதாவது வீட்டில் மூன்று விளக்கு ஏற்றி வைத்தால் புத்திர தோஷம் விலகும்.

நான்கு விளக்கு ஏற்றிவைத்து வீட்டில் தெய்வ வழிபாடு செய்து வந்தால் மகாலட்சுமியின் அருள் பெற்று செல்வம் பெருகும்.

ஐந்து விளக்கு ஏற்றி வைத்து நாம் தெய்வத்தை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களும் நமக்கு கிடைக்கபெறும்.

Previous articleகைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?
Next article8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here