நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

0
184

நீட் தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

முன்னதாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அஸீஸ் என்பவர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுத தயாராகியுள்ளனர்.

ஆனால் தற்போது கொரோனா மற்றும் பொது முடக்கத்தாலும் உலகமே முடங்கியுள்ள நிலையில் உள்ளது. மேலும் இந்த முடக்கத்தின் தளர்வுகள் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என தெரியவில்லை.

இந்த அசாதாரண சூழலில் நீட்தேர்வினை வைக்கும் போது, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அந்த மாணவர்களின் நிலை என்னவாகும், அவர்கள் நீட் தேர்வை எழுத முடியாத சூழல்தான் உள்ளது. ஆகவே இதுகுறித்து கலந்தாலோசித்து, மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையம் வைக்க வேண்டும் அல்லது நீட் தேர்வினை தள்ளிப்போட வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவின் தலைமையில் இன்று விசாரிக்கப்பட்டது.

மனுதாரரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பல்லவி பிரதாப் என்பவரின் வாதத்தில், “நீட் தேர்வினை மத்திய கிழக்கு நாடுகளில் நடத்த மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்” என அவரும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நீட் தேர்வினை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது?” என கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து மத்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க வேண்டும் எனவும், இந்த மனுவின் படி பதிலளிக்க மத்திய அரசு மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.

Previous articleபாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா!
Next articleமாநில மாவட்டங்களுக்கிடையே தனிநபர் சரக்கு போக்குவரத்திற்கு ஈ பாஸ் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here