கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

0
166

கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு,இனி அபராதம் விதிக்கப்பட திட்டமிட்டுயுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தை பொருத்த வரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனாவை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபொழுதிலும்,தமிழக அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுளுக்கு,
பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு எண்ணிக்கை, தினம் தினம் உயர்ந்த வண்ணமே உள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 379385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6517 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு விதித்த கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய சட்டம் குறித்த விதிகள் அடங்கிய கோப்புகளை சட்ட துறையிடம் ஒப்படைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும், இதனை சட்டத்துறை முடிவெடுத்து நோய் தடுப்புக்கான புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleதமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!
Next articleஅரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here