சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்

0
227

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி அதிமுக கூட்டணி அமைந்ததோ அதுபோலவே வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணியில் யார் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்

முன்னதாகவே திருவாரூரில் அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாவது,

பாஜகவின் தலைமையில்தான் அதிமுக கூட்டணி அமைய போகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “பாஜக தலைமையில் கூட்டணி அமையுமா என்பது பற்றியெல்லாம் இப்போது கூற இயலாது.

 

தேர்தல் வந்த பிறகுதான் யார் யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது பற்றிய நிலைப்பாட்டினைக் கூற முடியும். கூட்டணியில் யார் என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் வந்த பிறகுதான் கூட்டணியும்,

யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleபதவியை ராஜினாமா செய்துவிட்டாரா பிரதமர்?
Next articleவெங்காயம் வரத்து குறைந்ததால் இருமடங்கு உயர்ந்த வெங்காய விலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here