இந்தியாவில் ஒரே நாளில் 95880 பேர் குணம்: 1247 பேர் உயிரிழப்பு!

0
162

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,08,015 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,247 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 85,619 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 95,880 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 42,08,432 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 10,13,964 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,81,911 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 6,24,54,254 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleசுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Next articleஇந்த ஆவணத்தை காண்பித்தால் மட்டுமே அண்ணாமலையாரை தரிசிக்க முடியும்!! கோவில் நிர்வாகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here