ஒரே பொருள் பருக்கள் தானாக ஒரே இரவில் உதிர்ந்து விடும்!

0
234

ஒரே ஒரு பொருள் போதும் ஒரே இரவில் பருக்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும் தழும்பு இல்லாமல் உதிர்ந்துவிடும் அற்புதமான இயற்கை முறையினை பார்க்கலாம்!

தேவையான பொருள் 

1. கட்டிப் பெருங்காயம் -1

1. அவ்வளவுதான் கட்டிப் பெருங்காயம் ஒன்று இருந்தாலே போதும். கட்டிப் பெருங்காயம் என்று சிறு சிறு கடைகளில் கூட கிடைக்கும். அதை வாங்கி கொள்ளுங்கள்.

2. இப்பொழுது ஒரு சின்ன உரலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கவுத்து போட்டு விடுங்கள் அல்லது தேய்ப்பதற்கு ஒரு சிறிய கல் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு சில நீர்த்துளிகள் விட்டு கட்டிப் பெருங்காயத்தை அதில் இழைத்து தேய்க்கவும்.

3. இப்பொழுது அதில் ஒரு பால் போல் வெளிப்படும். அதை எடுத்து இரவு நேரங்களில் முகப்பருக்கள் மீது வைத்து வர, காலையில் முகப்பரு உதிர்ந்து விடுவதோடு முகப்பருவினால் வந்த மருக்களும் நீங்கிவிடும்.காலையில் எழுந்து முகம் கழுவிக் கொள்ளலாம்.

மேலும் மீண்டும் மருக்கள் அல்லது முகப்பருக்கள் வராமல் இருப்பதற்கு எண்ணெய் பசையுடன் கூடிய முகங்களுக்கு காரணம் உணவு பழக்கங்கள். எண்ணெய் பசை இருந்தால் உடலில் மலச்சிக்கல் உண்டு என்று சொல்வார்கள். அதிகம் தண்ணீர் குடித்து வந்தால் மற்றும் அதிகமான பச்சை காய்கறிகளை சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.

 

அதனால் அதிகமாக தண்ணீர் குடிக்கவும் மற்றும் பச்சை காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதனை கடைபிடித்து வந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. முகமும் நல்ல பொலிவுடன் இருக்கும்

 

Previous articleபுரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!
Next article“ஒரே நாடு – ஒரே ரேஷன்” இன்று முதல் அமல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here