மூன்று உயிர்களை! பலி வாங்கிய நிவர் புயல்!

0
202

தமிழ்நாட்டின் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது புயல் காரணமாக மொத்தமாக 380 மரங்கள் வேருடன் சாய்ந்து இருப்பதாகவும் நூற்றி ஒரு வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல சாலையில் விழுந்த மரங்களை அகற்றி வருவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது இந்த தகவலை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டை மிரட்டி வந்த நிவர் புயல் கரை கடந்ததை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது நிலப்பரப்பில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல் மிகத் தீவிர புயல் என்ற நிலையிலிருந்து தீவிர புயலாக வலுவடைந்து இருக்கின்றது இதன் காரணமாக பல இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகின்றது.

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கின்றது வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று இரவு முழுவதும் கடுமையான சூறை காற்று வீசிய காரணத்தால் சென்னை கடலூர் மாவட்ட பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டன இந்த நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 7 மணி முதல் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாண்டிச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களுக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

இந்தநிலையில் இது சம்பந்தமாக தெரிவித்திருக்கின்ற தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சில இடங்களில் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன எனவும் பயர் சேதங்கள் குறித்து தற்போதைக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். அதேபோல மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார். இதுவரை தமிழ்நாட்டில் கடலூரில் அதிக மழை பதிவாகி இருக்கின்றது புதன்கிழமை இரவு எட்டு முப்பது மணி முதல் வியாழன் பிற்பகல் 2 மணி வரை 24.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது அதே நேரத்தில் புதுச்சேரியில் இந்த காலகட்டத்தில் 23.7 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது மழை இன்னும் தொடர்ச்சியாக பெய்து வருகின்றது நாகப்பட்டினத்தில் 6.3 சென்டி மீட்டர் மழையும் காரைக்காலில் 8.8செண்டிமீட்டர் மழையும் சென்னையில் 8.9செண்டிமீட்டர் மழையும் பெய்திருக்கிறது இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக முதல்வர் கடலூருக்கு பயணம் செய்திருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜோதி தமிழ்நாட்டின் நிறுத்தப்பட்டிருக்கினறது மற்றும் ஐஎன்எஸ் சுமத்ரா விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு சென்று இருக்கின்றது தமிழகத்தில் மேலும் 24 மாவட்டங்களுக்கு தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கடும் மழை எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது. சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு தொடர்கின்றது தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது பெங்களூர் மற்றும் அதை சுற்றி இருக்கின்ற பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் மின்வினியோகம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் சீராகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Previous articleமக்களே உஷார்! இந்த Password வைத்திருந்தால் நொடியில் ஹேக் செய்யப்படுமாம்!
Next articleஇந்த ராசிக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 27-11-2020 Today Rasi Palan 27-11-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here