அவருக்கு என்ன அனுபவம் இருக்கின்றது! உதயநிதியை சீண்டிய குஷ்பு!

0
227

திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய தந்தை, மற்றும் தாத்தா பெயரை தெரிவித்து சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி அடைந்து விடலாம் என்று நினைத்துவிட கூடாது என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கின்றார்.

ஜெ. அன்பழகன் மறைவை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த தொகுதியின் பாஜக பொறுப்பாளராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தநிலையில், அந்த தொகுதியில் உரையாற்றிய குஷ்பு அதிமுகவின் முதலமைச்சர் வேட்ப்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். எங்களுடைய முதல்வர் வேட்பாளரை எங்கள் கட்சியின் தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறதே ? என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு கடுமையாக பதிலளித்திருக்கிறார். உதயநிதிக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கின்றது. தாத்தா, மற்றும் தந்தை ஆகியோரின் பெயரை தெரிவித்து வெற்றி அடைந்து விடலாம் என்று அவர் நினைத்து விடக் கூடாது. என பதில் தெரிவித்திருக்கின்றார். பாஜகவினரின் நோக்கம் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மிகத் தீவிரமாக பணி செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்வேகம் தந்தார் நடிகை குஷ்பூ.

Previous articleரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!
Next articleரஜினியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர் செய்த காரியத்தால் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here