விருப்பம் இல்லாமல் செய்ததன் காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

0
256
The paranoid allusions of the critics of this process were completely substantiated.
The paranoid allusions of the critics of this process were completely substantiated.

விருப்பம் இல்லாமல் செய்ததன் காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சென்னையில், ஆவடியை அடுத்த நந்தவனம் மேட்டூர், காந்தி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் திருநின்றவூரில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின் தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர் இதனிடையே நாகேஸ்வரியின் அம்மா செண்பகவல்லி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து நாகேஸ்வரி அவரை கவனிக்க திருமணமான பத்தே நாளில் வேலூருக்கு  சென்று விட்டார். அதன்பிறகு கடந்த 17ஆம் தேதி மணிகண்டன் நாகேஸ்வரி ஆகிய இருவரும் ஆவடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்கள்.

பின்னர் நேற்று காலை மணிகண்டன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அன்று இரவு வீட்டின் உரிமையாளர் காயத்ரி மணிகண்டனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் நாகேஸ்வரி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மணிகண்டனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பின் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் நாகேஸ்வரி திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே திருமணம் செய்து வைத்ததும், விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நாகேஸ்வரி திருமணமாகி இரண்டே மாதங்கள் தான் ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விருப்பமில்லாமல் திருமணம் செய்ததால் நாகேஸ்வரி மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது. புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous article14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது!
Next articleஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here