தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி பொதுமக்கள் பலி

0
203

பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.
இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

Previous articleகுழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
Next articleபாகிஸ்தானில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here