இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்!
கொரோனா தொற்றானது சென்ற வருடம் சீனாவில் உள்ள வுவன் பகுதியில் உருவாகி தற்போது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதில் அதிக பாதிப்பு உள்ள நாடக அமெரிக்க,பிரேசில்,இந்தியா ஆகியவை உள்ளது.தமிழ்நாட்டில் முதலில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அப்போது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர்.மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தது.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த கூட்டங்கள்,திருவிழாக்கள் நடத்த தடை விதித்தது.இவ்வாறு பல கட்டுப்பாடுகளை நிறுவியும் கொரோனா தொற்று குறைந்த பாடு இல்லை.
ஓர் நாளில் மட்டும் இந்தியாவில்.2 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தொற்று அதிகரித்துக்கொண்டே போவதால் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தினர். இன்று முதல் அந்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும்,வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி மதுபான கடைகளுக்கும் விதிமுறைகளை நிறுவியுள்ளனர்.
மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை செயல்பட்டுக்கொண்டிருக்கும் மதுபான கடைகளை மதியம் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே நடத்த அனுமதி தந்துள்ளனர்.சென்ற முறைப்போலவே இந்த முறையும் டோக்கன் வசதியை பயன்படுத்துமாறு கூறியுள்ளனர்.இந்த டோக்கன்களை மாலை 4 மணி வரை மட்டுமே தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் இது நடைமுறைக்கு வரும் நிலையில் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள் இரண்டு நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25-ம் தேதி மகாவீர் ஜெயந்தியும்,மே 1-ம் தேதி உழைப்பாளர்கள் தினமும் கொண்டாடப்படுகிறது.இந்த தினங்களை கொண்டடுவதையொட்டி திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மற்றும் பார் போன்றவை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.