அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி!

0
222

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி!

முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக புகாரில் சிக்கி வருகின்றனர்.அந்த வரிசையில் சத்துணவுத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி புகாரில் தற்போது சிக்கியியுள்ளார்.76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக அவரது உறவினர் புகார் அளித்துள்ளார்.15 பேரிடம் இவர் இந்த மோசடியை செய்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 64 வயதான குணசீலன்.இவர் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தற்போது பத்திர எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.இவர் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் ஆவார்.ஆகஸ்ட் 28ம் தேதி ராசிபுரம் காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பரபரப்பான புகார் ஒன்றை இவர் கொடுத்திருக்கிறார்.அதில் 2016ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சராக சரோஜா பொறுப்பேற்ற பின்னர் தன்னையும் தனது மனைவியையும் அழைத்ததாக புகாரி்ல் குறிப்பிட்டுள்ளார்.

சத்துணவுத் துறையில் அமைப்பாளர்,உதவியாளர்,சமையலர் ஆகிய பிரிவுகளில் பணியாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்களிடம் பணம் வாங்கித் தந்தால் வேலையில் சேர்த்து விடுவதாக சரோஜா கூறியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.அதன்படி ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15 பேரிடம் குறைந்த பட்சம் மூன்றரை லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 76 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்ததாகவும் தனது புகாரில் குணசீலன் குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சரோஜாவிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயைத் தான் வழங்கியதாகவும் அப்போது அவருடன் அவரது கணவர் லோகரஞ்சன் இருந்தார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.பின்னர் பாக்கி இருந்த 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லோகரஞ்சனிடம் கொடுத்ததாகவும் அப்போது முன்னாள் அமைச்சர் சரோஜா உடனிருந்ததாகவும் குணசீலன் கூறியுள்ளார்.தான் கொடுத்த பணத்தில்தான் தற்போது அவர்கள் ராசிபுரத்தில் வசிக்கும் புதிய வீட்டை வாங்கியதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

Previous articleஇந்தியாவில் உச்சம் தொட்ட டெலிகிராம்! எவ்வளவு பயனாளர்கள் தெரியுமா?
Next articleஎட்டு வருடங்களுக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் பிரபல இயக்குனர்! ஆர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here