தற்போது அமெரிக்காவில் பல முக்கிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிபொழிவினால் சமீபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு குளிர்காற்று அதிவேகமாக வீசி வருகிறது.
இச்சூழ்நிலையில் விலங்கினத்தின் மேல் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் கருணை காட்டி வருவது பாராட்டுக்குரியதாகும்.
இவர்களின் இச்செயலை கண்டு பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் என்கின்ற முக்கிய பகுதியில் உறையவைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. இந்த பனிபொழிவில் சிக்கித்தவித்த ஆமைகளுக்கு, அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். இந்த ஆமைகள் அனைத்தும் பாட்ரே என்கின்ற தீவிலுள்ள முகாமிற்கு கொண்டு சென்று பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில், ஆமைகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ வசதி மற்றும் ஜெனரேட்டர் வசதி போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஏறத்தாழ 4000 ஆமைகளுக்கு மேல் பனிபொழிவில் இருந்து மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் பல ஆமைகள் 100 வயதை கடந்தவை ஆகும்.