கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் மகிழ்ச்சியும் உண்டாகும் நாள்!!

0
45

கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் மகிழ்ச்சியும் உண்டாகும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் மகிழ்ச்சியும் உண்டாகும் நாள். காலையில் சந்திர பகவான் ராசிக்கு உள்ளேயே இருப்பதால் அலைச்சல்கள் உண்டாகும். மதியத்திற்கு பிறகு சந்திர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு வருவதால் தன வரவு தாமதப்பட்டாலும் இறுதியில் கட்டாயம் வந்து சேரும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மனக்குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani