கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
44

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை அருமையாக காப்பாற்ற மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்..

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வி அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani