முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

0
320
#image_title

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

முதல்வர் ஓட்டு கேட்க வந்தால் பாக்கி ரூ.4,000த்தை கேட்டு வாங்குங்கள் என்று  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரிக்க சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 கொடுத்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதுதான் தற்போது அவர் முதல்வர் ஆகிவிட்டாரே, பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கொடுக்க வேண்டியதுதானே? வெறும் ரூ.1,000 தான் கொடுத்திருக்கிறார். அவர் ஓட்டு கேட்க வந்தால், பாக்கி ரூ.4,000 கேட்டு வாங்குங்கள் என்று பேசியுள்ளார்.

Previous articleமூட்டு வலியால் அவதியா? ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்! 
Next articleராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here