அடுத்த 48 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

0
201

சென்னை வானிலை ஆய்வு மையம் நடைபெறுகின்ற ஒரு செய்தி குறிப்பில் இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உதகமண்டலம், கோவை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்க்கான வாய்ப்பிருக்கிறது.

வரும் 15ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்றும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வலுவான நிலையில் இந்தியா!
Next articleபுதிய வைரஸ் ஏற்படுத்திய முதல் மரணம்! அதிர்ச்சியில் மக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here