இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
240

தமிழக கடற்கரையை ஒட்டி இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்றைய தினம் மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நாளைய தினம் திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ,உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைகான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleசகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்!
Next articleரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here