ஆரம்பத்திலிருந்தே தமிழக பாஜக ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலும் சரி, தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் சமயத்திலும் சரி, அந்த கட்சியை மிகக் கடுமையாக பாஜக எதிர்த்து வருகிறது.திமுகவும் சாதாரணமாக விட்டுவிட வில்லை பாரதிய ஜனதா கட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பாஜக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து குற்றம் சுமத்திக் கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் டெல்லி அளவில் பார்த்தோமானால் பாஜக திமுகவை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை அதோடு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லி பாஜகவிடம் எந்த ஒரு கோரிக்கையும், முன்வைத்தாலும் அதனை பரிசீலிப்பது கூட இல்லை என்று சொல்லப்படுகிறது.இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை தவிர்த்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தேர்தல் பிரசாரத்தின் போது திமுக வாக்குறுதிகளை தெரிவித்தது அதனை நம்பித்தான் தமிழக மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள். அந்த கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மிக அதிகப்படியான வாட் வரி விதிக்கும் தமிழக அரசு விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் குறை சொல்லி வருகிறது. மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு தமிழக நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை வைப்பாரா? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
தவறுகள் அனைத்தையும் செய்துவிட்டு அதன் குற்றத்தை மட்டும் மற்றவர்கள் மீது சுமத்து வரை திமுக வாடிக்கையாக கொண்டு வருகிறது. ஆனால் இதையெல்லாம் அறியாத தமிழக மக்கள் திமுகவிற்கு வாக்களித்துவிட்டு தற்சமயம் வாக்களிப்பது ஏன் என விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலில், ஒருபுறம் அரக்க முகம் ஒருபுறம் மனித முகம் என்று இரண்டு முகங்கள் கொண்ட திமுக மக்களிடம் மனித முகத்தையும், அதன் பின்னால் மிருக முகத்தையும், வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறது என்று பரவலாக பேசப்படுகிறது. திமுகவின் அந்த உண்மையான முகத்தை பொதுமக்களுக்கு வெளி காட்டுவதற்காகவே அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.அந்த வரிசையில் தற்சமயம் பாரதிய ஜனதா கட்சியும் இறங்கியிருக்கிறது. ஆகவே கூடிய விரைவில் தமிழக அரசின் உண்மை முகம் பொதுமக்களுக்கு தெரிய வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.