காங்கோவில் சோகம்…படகு விபத்தில் பலர் பலி…!!

0
302

கின்ஷாசா:

 

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறு ஒன்றில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில்,பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. 

 

அந்த படகுகளில் ஆண்,பெண்,மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.காங்கோவில் சோகம்...படகு விபத்தில் பலர் பலி…!!

அந்த படகு வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தது.திடீரென எதிர்பாராதவிதமாக படகுகள் சட்டென்று ஆற்றில் கவிழ்ந்தன.பயணம் செய்த மக்கள் சிறிது நேரத்தில் நிலைகுலைந்தனர்.

 

இதில் படகுகளில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் நீருக்குள் முழ்கினர்.உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து,தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

காங்கோவில் சோகம்...படகு விபத்தில் பலர் பலி…!!

ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் நீரின் உள்ளே சிக்கிய 61 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 

 

மேலும்,100-க்கும் அதிகமானோரின் நிலைமை என்னவென்று  தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

Previous articleஇதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்!
Next articleரயில் நிலையங்களில் இனி இவர்களுக்கென தனி அறிமுகம்! பயன்படுத்திய பிறகு செடியாக மாறிவிடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here