மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
69

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் எல்லா வேலைகளும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.

குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளதால் சந்தோஷமாக இருப்பீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் அனைத்து காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியடைந்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்த சில சலுகைகளையும் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில அதிரடியான திட்டங்களை தீட்டி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள் அதன் மூலம் லாபம் அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப் பேச்சுகளில் ஜொலிப்பார்கள் . கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தைரியமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தைரியம் மிகும் ‌.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நேரமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani