மத்திய கிசான் ரயில் சேவை பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் துவக்கம் !! ரயில்வே துறை அறிவிப்பு !!

0
116

இந்திய விவசாயிகளுக்காக இயக்கப்படும் புதிய கிசான் ரயில் சேவையில், இன்று ஆந்திராவிலிருந்து டெல்லிக்கு சுமார் 242 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ரயில் புறப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் காய்கறி மற்றும் பழங்களை எடுத்து செல்லும் வகையில் கிசான் ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த ஆகஸ்டு ஏழாம் தேதி முதல் ரயில் சேவை மஹாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்டது .இதன் மூலம் நாட்டில் உள்ள பல பகுதிகளில் விளையும் விவசாய பொருட்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

அதன் அடுத்த கட்டமாக மற்றொரு கிசான் ரயில் சேவை தற்பொழுது செயல்படுத்தப்பட்டது. அதன்படி இன்று காலை புதிய கிசான் ரயில் பழம் மற்றும் காய்கறிகளுடன் ஆந்திர மாநிலத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய கிசான் ரயில் ஆந்திரா மாநிலம் ஆனந்தபுரம் பகுதியிலிருந்து டெல்லிக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் யாதவ் கூறுகையில், இந்திய கிசான் ரயில்வே சேவை இயக்கி வருகிறது என்று கூறினார் .மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை ரயில் மூலமாக கொண்டு செல்வதற்கு இந்திய அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த மானியத்தின் கீழ் ,பயனாளர்கள் தனது டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.