காலை முதலே சென்னையில் பொழியும் இடியுடன் கூடிய கனமழை!

0
196

தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது அதேபோல சென்னையில் சென்ற சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த சூழலில், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது.

இந்த சூழ்நிலையில், மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 24ஆம் தேதி வரையில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கே அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Previous articleபுதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்!
Next articleபள்ளிகள் திறப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here