முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்!

0
211

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பல விஷயங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. அதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படுவது மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படுவது, கல்லூரிகள் செயல்படுவது, உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் அடங்கும்.

அதோடு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கிராமசபை கூட்டங்கள் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு பல அரசியல் கட்சி தலைவர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தாருங்கள் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்கள்.

இந்த சூழ்நிலையில் ,தமிழகம் முழுவதும் புதிதாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் அந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறலாம் என்று சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பங்கேற்றார். தமிழ்நாட்டில் 615 நாட்களுக்குப் பின்னர் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராமத்தில் நடந்து வரும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானம் மூலமாக இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காவல்துறையினர் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாப்பாபட்டி கிராமத்திற்கு போகும் வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் வயலில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்கள் இடத்திற்கு சென்ற முதலமைச்சர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து கிராம சபை கூட்டம் நடைபெறும் பகுதிக்குச் சென்ற முதலமைச்சருக்கு மரியாதை வழங்கப்பட்டது, கூட்டத்தில் தாங்கள் கிராமத்திற்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் தொடர்பாக ஆண்கள் சார்பாக மூன்று பேரும், பெண்கள் சார்பாக 3 பெரும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்கள்.

கோரிக்கைகளுக்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பாப்பாரப்பட்டியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமம்தான் இந்தியா என்று அறிவித்தவர் காந்தி இன்று மதுரையுடன் மகாத்மா காந்திக்கு இருக்கக்கூடிய தொடர்பு தொடர்பாக உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர். அதன் பின்னர் தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் 2006ஆம் ஆண்டு பாப்பா பட்டியில் நடந்த தேர்தல் தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தேர்தல் சமயத்தில் அளித்த 505 வாக்குறுதிகளை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. வாக்குறுதிகளில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து உள்ளோம் என தெரிவித்திருக்கிறார். இது தமிழர்களுக்கான ஆட்சி இது என்னுடைய அரசு அல்ல நம்முடைய அரசு என தெரிவித்து இருக்கின்றார். அவர் நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தற்சமயம் உங்களை மகிழ்விக்க கூடிய திட்டங்கள் சிலவற்றை தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மதுரை பாப்பா பட்டியில் 23.5 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், பாப்பாபட்டி மகாதேவன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 10 93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், 11.59 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் மகாதேவன் பட்டியில் 30 லிட்டர் கொள்ளளவில் நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவற்றை கட்டித் தரப்படும் என கூறியிருக்கிறார்.

கல்லுப்பட்டி, மகாதேவன் பட்டி , உள்ளிட்ட கிராமங்களில் நாற்பத்தி எட்டு லட்சம் மதிப்பிலான மயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் 6 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அறுக்கும் தளம் அமைக்கப்படும் என கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது தொடர்பாக தொடர்ந்து நான் ஆய்வை மேற்கொண்டு இருப்பேன் இந்த அளவுக்கு ஆர்வமாக கிராம சபைக் கூட்டத்திற்கு பொதுமக்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Previous articleகுற்றவாளிகளே எச்சரிக்கை! உண்மையை படம்பிடிக்கும் நியூ மெஷின்!
Next articleஆயிரம் வேலைகளுக்கு மத்தியிலும் சுறுசுறுப்பை இழக்காத முதலமைச்சர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here