டிரண்டாகும் தளபதியின் தாறுமாறான ட்வீட்! உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

0
192

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர் பட்டாளத்தை பற்றி எவரும் சொல்ல வேண்டியது அவசியம் அல்ல.

இவ்வாறு இருக்க விஜய் அவருடைய படத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த பதிவு அவரது ரசிகர்களை பல மடங்கு உற்ச்சாகப் படுத்தியுள்ளது.

அதாவது இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் தான் கத்தி.  மேலும் இந்த படம் திரையிடப்பட முடியாத அளவிற்கு பல சிக்கல்கள் எழுந்தன.

ஆனால் பல சிக்கல்களை  சிதறடித்து வெளியான கத்தி படம் 12 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் அப்போது தளபதி விஜய் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது தளபதி விஜய் கத்தி படத்தை பற்றி பேசிய ஒரு நபருக்கு, ‘படம் வராதுன்னு சொன்னாங்க. தியேட்டர்ல 12 மணி வரைக்கும் டிக்கெட் கொடுக்கல. எண்ணி 12வது நாள் 100 கோடின்னு சொன்னாங்க’ என்று மாஸ்  ரிப்ளையை பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த பதிவு தற்போது தளபதி ரசிகர்களால் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Previous articleபுதுசு கண்ணா புதுசு…! இனி எல்லாமே புதுசு…!
Next articleவெகுவாக குறைந்த நோய் தொற்று…! நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here