லஷ்மி விலாஸ் வங்கிக்கு நெருக்கடி – ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகள்!

0
132

லஷ்மி விலாஸ் வங்கியில், வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

லஷ்மி விலாஸ் வங்கியின் தலைமை இடம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. தற்போது இந்த வங்கியின் வாராக்கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சமயத்தில் ரிசர்வ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அது என்னவென்றால் லஷ்மி விலாஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என்பதே அந்த நிபந்தனை ஆகும்.

அதுமட்டுமின்றி இந்த கட்டுப்பாடு வருகின்ற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதையும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அத்துடன் லஷ்மி விலாஸ் வங்கி கணக்கில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் இந்த நடவடிக்கையால் அச்சப்பட தேவையில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.