அட நதியாவா இது!! வைரலாகி வரும் உடற்பயிற்சி செய்யும் காணொளி!!
தமிழ் திரைப்பட முன்னணி நடிகைகளில் ஒருவர் நதியா. இவர் இயற்பெயர் சரினா அனுஷா மோய்டு ஆகும். இவர் 80 காலகட்டத்தில் நாயகியாக இருந்தார். பின்னர் இருபதாம் நூற்றாண்டு முதல் தற்போது வரை துணை பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.
நதியா தமிழ் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் கதாநாயகியாக நடித்த காலகட்டங்களில் எந்த பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார். நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக மீண்டும் அறிமுகமானார். மேலும் அவரது நடிப்பிற்கு விமர்சன ரீதியான பாராட்டை பெற்று இருந்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் ஆரோக்கியா பால் மற்றும் தங்கமயில் ஜுவல்லரி பிராண்ட் தூதராக கையெழுத்திட்டிருந்தார். ஜெயா டிவியில் நடிகை குஷ்புக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமாக மிர்ச்சியில் நடிகர் பிரபாஸின் தயாராகவும் நடித்திருந்தார். மேலும் அவர் நடித்து இரு கதாபாத்திரங்களும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. 2006 ஆம் ஆண்டு அத்தாரின்டிகி தாரேதியில் நடித்ததாக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதை பெற்றார்.
இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார். இவர் எப்போதும் இளமை குறையாமல் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். தற்போது இவருக்கு வயது 54. இப்போதும் இவர் இளமை குறையாமல் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார்.
மேலும் அவரை பார்க்கும் போதெல்லாம் நமது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த நேரத்தில் நடிகை நதியா தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.