தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”

0
120

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”

கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்த்து போராட்டங்கள், பல்வேறு வகையில் கண்டனங்கள்  அரங்கேறுவதும், நாளடைவில் அவை அடங்கிவிடுவதும் நமக்கு வாடிக்கையாகவே ஆகிபோனநிலையில் அதிரடியாக களமிறக்கபட்டிருக்கிறது “திஷா”.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆந்திர அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.இதன்படி பெண்களையும், குழந்தைகளையும் பலாத்காரம் செய்பவர்களுக்கு 21 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

இதற்க்கு “ஆந்திரப் பிரதேச திஷா மசோதா” கிரிமினல் சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீதான புலன் விசாரணையை 7 நாட்களில் முடித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் விசாரணையை முடிக்க வேண்டும்.

பெண்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவோ துன்புறுத்தினால், முதல் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், 2-வது முறையாகவும் தொடர்ந்து செய்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும். இதற்காக 354இ பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை வரவேற்கும் விதமாக பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகை ரோஜா உட்பட சிலர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இனிப்பு வழங்கி கையில் ராக்கி கட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர். “திஷா” நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது . பல்வேறு கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் , முன்னணி பிரபலங்கள் என அணைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுவருகிறது .

இந்நிலையில் திஷா சட்டத்தைப் போல் கேரள மாநிலத்திலும் கொண்டுவருவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வோம் என்று கேரள சுகாதார மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதியளித்துள்ளார்.

அதேபோல், தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் திஷா சட்டமசோதாவை நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆந்திர சபாநாயகர் நேற்று முன்தினம் சட்டசபையில் பேசும்போது “டெல்லி அரசாங்கம் நமது திஷா சட்டத்தின் மீது ஆர்வம் காட்டியுள்ளதோடு அதன் குறித்த விளக்கத்தை கேட்டு தெரிந்து கொண்டதாகவும் ” தெரிவித்தார்.