தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

0
149
DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட்டால் இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகனும், விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயகாந்தும் தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறப்பட்டது. அப்போது விஜயகாந்திடம் விரைவில் தங்களை நேரில் வந்து சந்திப்பேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சமீபத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ வும், முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலினும், விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர், அவரிடம் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.

அப்போது அங்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் இருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது தேமுதிக சார்பில் 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை விஜயகாந்த் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் வழங்கினார்.