சாப்பிட்டவுடனே வயிறு எரிச்சல் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா? இதை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!
உணவு உட்கொண்ட பின்னர் வயிற்றுப் பகுதியில் நெருப்பு வைத்து போல் எரிச்சல் உணர்வு,உடனே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உங்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.இவை வயிற்றுப் பகுதியில் புண் இருந்தால் ஏற்படும்.சிலருக்கு வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பதால் எரிச்சல் ஏற்படும்.
கோடை காலத்தில் இது போன்ற பாதிப்புகளை பலர் எதிர்கொள்ள நேரிடும்.இந்த வயிறு எரிச்சல் காரணமாக உணவு உட்கொள்ளவே சிலர் அஞ்சுவார்கள்.சிலர் காலை உணவை தவிர்த்து வருவதால் வயிறு எரிச்சலுக்கு ஆளாவார்கள்.
வயிறு எரிச்சல் குணமாக எளிய வீட்டு வைத்தியம்:-
1)புதினா
2)துளசி
3)வெந்தயம்
ஒரு கிளாஸ் நீரில் 2 அல்லது 3 புதினா இலைகள்,5 துளசி இலைகள் மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வயிறு எரிச்சல்,மலம் கழிக்கும் உணர்வு நீங்கும்.
1)தயிர்
2)கொத்தமல்லி தழை
3)வெங்காயம்
ஒரு கப் தயிரில் 2 தேக்கரண்டி கொத்தமல்லி தழை,2 தேக்கரண்டி சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
1)ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் 1/2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்
ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் நீங்கும்.
1)இஞ்சி
2)தண்ணீர்
3)தேன்
ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு தூண்டு இடித்த இஞ்சி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் மற்றும் மலம் கழிக்கும் உணர்வு நீங்கும்.அதேபோல் ஒரு கிளாஸ் மோரில் 1/4 தேக்கரண்டி ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி சேர்த்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.