ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!!

0
131
Do you know how many festivals there are in the month of Audi, the month of Goddess?

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!!

பெண்மை என்னும் சக்தியின் பெருமைச் சேர்க்கும் மாதம் தான் ஆடிமாதம் சூறை காற்றோடு அம்மனின் அருள் காற்று அரவணைக்கும் மாதம் ஆடி மாதம்.இம்மாதத்தில் பண்டிகைகள் கோயில்களில் கலைகட்டும், ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை.ஆடி மாதம் பிறக்கும் பொழுது தட்சிணாயனம் ஆரம்பமாகிறது உயிர்களைக் காக்கும் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்திருக்கிறார்.தன் பயண திசையை இம்மாதத்தில் இருந்து தெற்கு திசையை நோக்கி மாற்றிக் கொள்வாராம்.

ஆடி முதல் மார்கழி மாதம் வரை 6 மாதம் தட்சிணாயனம் இதுவே தேவர்களின் இரவு நேரம் ஆகும்.பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்திருக்கிறார்.ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட அம்மனின் சக்தி தான் அதிகமாக இருக்கும் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்,என்பது ஐதீகம். “ஆடிப்பட்டம்” தேடி விதை என்ற பழமொழியே உண்டு.ஆடியில் விதைத்தல், விவசாயம் செய்தல்,துணி நெய்தல்,குடிசைத் தொழில் செய்தல் போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கிய ஆதார வேலைகளில் ஈடுபடும் மாதம் ஆடி மாதம்.

தட்சிணாயனம் மழைக் காலத்தின் துவக்கத்தை குறிக்கிறது அதாவது வளத்தினை தொடர்ந்து பண்டிகைகள் மற்றும் தெய்வீக வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக வைத்திருக்கிறார்கள்.மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை பெய்ய வேண்டும் எனவும், உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்க வேண்டும் எனவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி இருக்கிறார்கள்.

இறைவழிபாட்டில் சிறப்புடையது ஆடிமாதம் ஆடஅம்மாத பிறப்பை முன்னிட்டு மக்கள் அனைவரும் தேங்காய்களை மேற்புறம் துளையிட்டு அதில் பச்சரிசி வெல்லம்,ஏலக்காய்,நெய் போன்றவற்றை ஊற்றி நீண்ட குச்சியில் செருகி நெருப்பில் சுடுகின்றனர். பின்னர் அதை சாமிக்கு படைத்து விட்டு அதை பிரசாதமாகச் சாப்பிடுவது வழக்கம். ஆடி மாதத்தில் சந்திரன் தனது சொந்த வீட்டில் இருக்கிறார்,அப்போது சூரியனுடன் தொடர்பு ஏற்படும் நாள் ஆடி அமாவாசை நாளாகும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும்.