கொரோனா தொற்று அதிகம் உள்ள  நாடாக இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க!

0
110
Do you know the place where India has the highest incidence of corona infection? Get the Kota Shock!

கொரோனா தொற்று அதிகம் உள்ள  நாடாக இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க!

சென்ற வருடம் இதே மாதத்தில் தான் கொரோனா தொற்று அதிக அளவு பரவ ஆரம்பித்தது.சீனாவில் இருந்து பரவிய இந்த தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தனர்.கடந்த செப்டம்பர் மாதம் தான் மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின் மக்கள் கொரோன வை மறந்து வாழ ஆரம்பித்ததால் மீண்டும் கொரோனா 2 வது அலை உருவாகி வேகமாக பரவி வருகிறது.இந்த கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் தொற்று பரவுவதை கட்டுபடுத்த முடியவில்லை.இருப்பினும் தடுப்பூசி போடும் பணிகள் மும்மரமாக நடைபெற்று தான் வருகிறது.

பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.66 கோடியாக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 8 ஆயிரத்து 819 ஆகா உயர்ந்துள்ளது.

கொரானாவிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 761 ஆக உள்ளது.உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்க தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது.பிரேசில் 2 வது இடத்தையும் மற்றும் இந்தியா நான்காவது இடத்திலிருந்து தற்போது 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.இதற்கு மக்கள் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததே காரணம் என பலர் கூறி வருகின்றனர்.இந்தியா 3 வது இடத்தை  பிடித்திருப்பதை கண்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.