வெள்ளிக்கிழமையில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

0
248

வெள்ளிக்கிழமையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் துர்க்கைக்கு மிக உகந்த நாள் என கூறப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவார் என்பது ஐதீகம் ஆகும்.

மேலும், ஒரு வீடு எந்த அளவிற்கு தூய்மையாக மற்றும் மங்களகரமாக உள்ளதோ, அந்த அளவிற்கு செல்வமும், அருளும் அந்த வீட்டில் நிறைந்து இருக்கும்.

வெள்ளிக்கிழமை நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை :

அதிகாலை 4 – 5 மணி பிரம்ம முகூர்த்தம் எனப்படும். அந்த நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

மேலும், பெண்கள், தூங்கி எழுந்து வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் காரணத்தால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றினை கடவுளை வழிபட வேண்டும்.

மாலையில் விளக்கு ஏற்றியவுடன் வெளியே செல்லக்கூடாது.

பூஜையறையில் தினந்தோறும் கடவுளின் படங்களுக்கு பூக்களை படைக்க வேண்டும்.

வீட்டின் கதவு மற்றும் அருகாளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதன் காரணமாக தீய சக்திகள் வீட்டிற்குள் வராது.

பூஜைகள் முடிந்த பின், பெண்கள் மாங்கல்யத்திலும், நெற்றியிலும் கட்டாயமாக குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வரும் குடும்பத் தலைவி தான் முதலில் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு, சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும்.

கடவுளுக்கு இலையில் தான் உணவு மற்றும் பழங்களை படைக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை நாளில் வீட்டில் உப்பு வாங்குவது நமக்கு அனைத்துவித செல்வங்களையும் கொடுக்கும்.

வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, மஞ்சள், பாக்கு, பூ, குங்குமம் போன்றவற்றை கொடுப்பது நமக்கு மிக சுபிட்சத்தைக் கொடுக்கும்.

வெள்ளிக்கிழமை நாளில் ஒருவர் செய்யக்கூடாதவை :

பணம் கடன் கொடுப்பது, புடைப்பது, அரிசி வறுப்பது கூடாது. பால், தயிர், காய்கறிகள் போன்றவற்றை இரவில் கடன் வாங்குதல் மற்றும் கடன்கொடுத்தல் கூடாது.

வெள்ளிக்கிழமையில் பால் பொங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முகம் கழுவுதல், தலைவாருதல், பேன் பார்த்தல் போன்றவை விளக்கு வைத்த பிறகு செய்யக்கூடாது.

விளக்கு ஏற்றிய பின் குப்பைகளை வெளியில் வீச கூடாது.

காலையில் அல்லது மாலையில் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும்போது விளக்கு ஏற்றக்கூடாது.

நகம் மற்றும் முடியை வெள்ளிக்கிழமைகளில் வெட்டக்கூடாது.

பூஜை நடக்கும்போது, விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது.

ஈரமான ஆடைகளுடனோ அல்லது துண்டை கட்டுக்கொண்டோ, தொழில் போட்டுக்கொண்டோ கடவுளை வணங்கக்கூடாது.

தேங்காயை இரண்டாக மட்டுமே உடைத்து வைக்க வேண்டும். இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால் அதனை கடவுளுக்கு வைக்கக்கூடாது.

பிளாஸ்டிக் தோரணம் மற்றும் பிளாஸ்டிக் பூக்களை, இயற்கையான மா, தென்னை மற்றும் பூக்களுக்கு பதிலாக பயன்படுத்த கூடாது.

Previous articleஐசிசி வெளியிட்ட புதிய அட்டவணை! சீனியர் வீரர்களை ஓரங்கட்டிய கோலி!
Next articleநீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here