கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
32
#image_title

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்

*கிராம்பு – 5

*பட்டை – 1 துண்டு

*இஞ்சி – 1 தூண்டு

*வெல்லம் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் அவை சிறிதளவு சூடேறி வந்ததும் எடுத்து வைத்துள்ள 5 கிராம்பு, 1 துண்டு பட்டை, 1 துண்டு இடித்த இஞ்சி சேர்த்துக் மிதமான தீயில் நன்கு கொத்திக விடவும்.

கொதிக்கும் நீரில் கிராம்பு, பட்டை, இஞ்சி சாறு முழுவதுமாக இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் ஒரு கிளாஸில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள கிராம்பு டீயை அதில் வடிகட்டி நன்கு கலக்கி பருகவும்.

குறிப்பு:-

*இதில் சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்க்கக் கூடாது.

*காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது.