கூட்டணி கட்சிக்கே வேட்டு வைத்த துரைமுருகன்!

0
81

தமிழகத்தில் சென்ற மாதம் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி முடிவுற்ற வேட்புமனு தாக்கல் 22ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.அந்த வகையில், முதல்வர் துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என்று எல்லோரும் தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வந்தார்கள்.

அந்த வகையில், வரும் 4ஆம் தேதியுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது இன்றைய நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த வகையில், திமுக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மத்திய அரசு தற்சமயம் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், என்ற கோஷத்தை உருவாக்கி வருகிறது மத்திய பாஜக அரசு. இந்தியா பல இன மொழி கலாச்சாரம் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு நாடு அதனை அழிப்பதற்கு சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசை எதிர்த்து நிற்க தைரியமிக்க ஒரு நபர் வேண்டும் அதற்கு ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.
அதோடு திமுக ஆட்சியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட தொலைக்காட்சி இன்று வரையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட மின்விசிறி கிரைண்டர் மிக்ஸி போன்ற எதுவுமே செயல்படவில்லை தரமற்ற அரசு என்பதற்கு இதுவே உதாரணம் பார்த்துக் கொண்டே இருங்கள் ஸ்டாலின் பத்து வருடத்திற்கு மட்டுமே முதலமைச்சராக இருப்பார் அதன் பிறகு பிரதமர் ஆகி விடுவார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

திமுகவின் மன எண்ணம் இப்படி இருக்க முதல்வர் ஆவதற்கு பத்து வருட காலமாக முயற்சி செய்தும் முதல்வர் நாற்காலியை கூட நெருங்க முடியவில்லை அப்படி இருக்கும்போது இவர் எப்படி பிரதமர் ஆக முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் இளம் தலைமுறையினர்.அதோடு பிரசாந்த் கிஷோர் என்பவரை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்து முதல்வர் ஆகி விடலாம் என்ற கனவில் திமுக மிதந்து கொண்டிருக்கிறது திமுகவின் இந்த நினைப்பு ஒரு போதும் நடக்கப் போவதில்லை என்ற கருத்தும் தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.