2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!

0
184
#image_title

2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!

அமெரிக்காவில் 2032ல் நடைபெறும் தேர்தலில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவான வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக எலான் மஸ்க் அவர்கள் கூறியது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி ஆகிய பல நிறுவனங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களை இன்றே ஆராய்ச்சி செய்வதில் மிகவும் வல்லமை பெற்றவர். இவருடைய ஆராய்ச்சிக்கான கணிப்புகள் மற்றும் ஆருடங்கள் ஆகியவை உலக அளவில் கவனம் பெறுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்பொழுது எலான் மஸ்க் அவர்கள் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்த 2024ம் ஆண்டு இந்தியா உள்பட பல நாடுகளில் தேர்தல் நடைபெறுவதற்கான சிறப்பு பெற்ற ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்காவில் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு எதிராக முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் களமிறங்குகிறார். இதில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தன்னுடைய நிலைப்பாட்டினை எலான் மஸ்க் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் அவர்கள் கலந்து கொண்டார். அதில் எலான் மஸ்க் அவர்களிடம் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு எலான் மஸ்க் அவர்கள் “2032ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏஐ வேட்பாளராக நேரடியாக தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஏன் 2032 தேர்தலில் ஏஐ வேட்பாளர் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார். எலான் மஸ்க் அவர்களின் இந்த கருத்து தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.