ஆட்சிக்கு வந்த 10 தினங்களிலேயே அரசை விமர்சிப்பது அழகல்ல! முன்னாள் அமைச்சர் பளீச்!

0
102

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து விலகி கொள்வதாக திடீரென அறிவிப்பை வெளியிட்டார். ஆனாலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்ட காரணத்தால், சசிகலா மறுபடியும் கைப்பற்ற அரசியலில் களம் இறங்குவார் என்று அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அது நிஜமாகி இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்டோரின் கைகளிலிருந்து மீட்டெடுப்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் சசிகலா வேகமெடுக்க செய்திருப்பதாக தெரிகிறது. அவ்வப்போது அதிமுகவின் பிரமுகர்களிடம் கட்சியை சரிசெய்துவிடலாம் சீக்கிரமாக வருகை தருகிறேன் என்று தான் பேசுவது போல ஆடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கி வருகிறார் சசிகலா. இதுதொடர்பாக உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினர் உடன் சசிகலா உரையாடவில்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அவருடன் அவர் உரையாற்றிய வருகின்றார் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சசிகலா அதிமுகவிற்கு சாதகமாக செயல்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய விவகாரத்தில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோர் ஒன்றிணைந்து மேற்கொள்வார்கள் என்றும் திமுக ஆட்சிக்கு வந்து 10 தினங்களிலேயே அரசை விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிக்கு அழகல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.