விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்?

0
328
#image_title

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்?

கடந்த ஜந்து ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் தவணை ஒன்றுக்கு 2000 என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6000 வழங்கப்பட்டு வருகிறது.

15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணை வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் அவர்களுக்கு கிடைக்கும் இந்த தவணை மிகவும் உபயோகமாக உள்ளது என கூறுகின்றனர்.

பிரதம மந்திரி கிசான் நிதி யோஜன திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 15 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளது குறிப்பிடதக்கது.